விசைத்தறி தொழிலாளி மகனுக்கு "மெடிக்கல் சீட்' : வசதி இல்லாமல் பரிதவிப்பு

ராசிபுரம்:அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், போதிய வசதி இல்லாததால், விசைத்தறி கூலித் தொழிலாளியின், மாற்றுத்திறனாளி மகன், செய்வதறியாது தவிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 11வது வார்டு, அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி சுப்ரமணி (60). அவருக்கு, விஜயா என்ற மனைவி, செல்வி, மயில், ரத்னா என மூன்று மகள், கதிர்வேலு (18), கோபால் (15) என, இரு மகன்களும் உள்ளனர்.மூன்று மகள்களுக்கும் திருமணமாகி செட்டிலாகி விட்டனர். கடைசி மகன் கோபால், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். அதில், மாற்றுத்திறனாளியான கதிர்வேலு, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்தார். மே மாதம் வெளியான ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவில், கதிர்வேலு, 1,200க்கு, 1,158 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் ஐந்தாமிடமும் பெற்றார்.
மருத்துவபடிப்புகான கவுன்சலிங், சென்னையில் நடந்தது. அதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மதிப்பெண் அடிப்படையில், 198.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்து கதிர்வேலு சாதனை படைத்தார்.
அதை தொடர்ந்து, மாணவர் கதிர்வேலு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து, அங்கு சேர்ந்து படிக்க உள்ளார்.மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதன்படி மருத்துவ படிப்பு முடிக்க, மூன்றரை லட்சம் ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.அவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைக்கும் நிலையில், மாணவர் கதிர்வேலின் குடும்ப சூழல் இடம் கொடுக்காத நிலை உள்ளது. கதிர்வேலுவின் தந்தை சுப்ரமணி, தன் மூன்று மகள்களையும் கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறார். அதனால், நல்ல மதிப்பெண் பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், தனது மகனை படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், படிக்க உதவிக்கு ஏங்கும் விசைத்தறி கூலி தொழிலாளியின், மாற்றுத்திறனாளி மகன் கதிர்வேலுக்கு உதவி செய்ய விரும்புவோர், 73732 70574 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
http://www.dinamalar.com/News_ Detail.asp?Id=268094

http://www.dinamalar.com/News_
No comments:
Post a Comment